என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விதி மீறல்"
- மீதமுள்ள குவாரிகளில் விதிமீறல் கண்டறிய சர்வே எடுத்து அபராதம் விதிக்கப்படும்.
- இதுவரை 66 குவாரி குத்தகைதாரர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
கோவை,
கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 8 குவாரிகளில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் 12 குவாரிகளில் நில அளவீடு செய்ததில் 8 குவாரிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
மீதமுள்ள குவாரிகளில் விதிமீறல் கண்டறிய சர்வே எடுத்து அபராதம் விதிக்கப்படும். குவாரி குத்தகைதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் நில அளவீடு செய்து எல்லை தூண்கள் நட அறிவுறுத்தப்பட்டது. இதுவரை 66 குவாரி குத்தகைதாரர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், கடந்த 2 மாதங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் கொண்டுசென்றதற்காக சிறப்பு பறக்கும் படையின் மூலம் 15 வாகனங்கள் மற்றும் கனிம வளத்துறையினர் மூலம் 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்டும், அதிக பாரம் ஏற்றி சென்றதற்காக வட்டார போக்குவரத்து அலுவலர்களால் 21 வாகனங்கள் கைப்பற்றப்பட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அனுமதி பெறாத, விதிமீறல் சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
- குடோன், வீடுகளை வாடகைக்கு பெற்று சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்களை இயக்குகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூரில் மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாத, விதிமீறல் சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.நகர பகுதிகளில் குடோன், வீடுகளை வாடகைக்கு பெற்று சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்களை இயக்குகின்றனர்.சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை அருகில் செல்லும் சாக்கடை கால்வாய், நீர் நிலைகளில் திறந்து விடுகின்றனர்.
இதை ஆய்வு செய்ய மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (வடக்கு) சரவணகுமார், பறக்கும்படை பொறியாளர் பழனிசாமி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பாரதிராஜா உட்பட அதிகாரிகள் குழுவினர், பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் விதிமீறல் நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இதில் சாமுண்டிபுரத்தில் அருகருகே இயங்கிய இரண்டு பிரின்டிங் நிறுவனங்கள் சிக்கின. டேபிள் பிரின்டிங் எந்திரங்களை நிறுவியுள்ள இந்நிறுவனங்கள் மாசுகட்டுப்பாடு வாரியத்தில் அனுமதி பெறவில்லை.சுத்திகரிக்காத பிரின்டிங் கழிவுநீரை அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டுள்ளன.அதேபோல் கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரத்தில் அனுமதி பெறாமல் இயங்கிய சாய ஆலையும் பிடிபட்டது. எந்த அனுமதியும் பெறாத இந்த ஆலை 5 கிலோ கொள்ளளவுள்ள விஞ்ச் எந்திரத்தை நிறுவி, துணிக்கு சாயமேற்றியதோடு சாயக்கழிவுநீரை விதிமீறி வெளியே திறந்துவிட்டதும் தெரியவந்தது.
அனுமதி பெறாமல் இயங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்திய 2 பிரின்டிங், ஒரு சாய ஆலையின் மின் இணைப்பு துண்டிக்க மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைத்தனர். ஒருங்கிணைப்புக்குழு தலைவரான கலெக்டர் வினீத் உத்தரவுப்படி, 3 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
- மதுரையில் பொட்டல விதிமுறை மீறலில் ஈடுபட்ட 44 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வி தெரிவித்து உள்ளார்.
மதுரை
மதுரை கூடுதல் தொழி லாளர் கமிஷனர் வழிகாட்டுதலின்படி, இணை கமிஷனர் அறிவுரைப்படி, மதுரை மாவட்டத்தில் கடந்த 11, 12-ம் தேதிகளில் பொட்டல பொருட்கள் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் விதிமுறைகளை மீறி பொட்டல பொருட்களை விற்பனை செய்த 44 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே நுகர்வோர் நலன் கருதி, தயாரிப்பாளர் முகவரி, பொட்டலத்தின் பெயர், நிகர எடை, தயாரிக்கப்பட்ட மாதம்- ஆண்டு ,அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, நுகர்வோர் குறைதீர்க்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி எண் ஆகிய விபரங்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
வணிகர்கள் அனைவரும் எடை அளவைகள் மற்றும் தராசுகளை முத்திரை யிட்டு பயன்படுத்த வேண்டும். வெளி மாநில தொழி லாளரை பணி யமர்த்தும் நிறுவனங்கள், அவர்களின் பெயர், விபரங்களை labour.tn.gov.in/ism இணையதளத்தில் கட்டாயம் விடுதலின்றி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வி தெரிவித்து உள்ளார்.
- குவாரிகள், ஜல்லி உற்பத்தி நிலையங்கள், தார் கலவை தொழிற்சாலைகள் ஆகியவற்றின் முறைகேடுகள்.
- சட்டமீறல்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்திட வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் வனஜா ஆகியோரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;
பல்லடம் தாலூக்கா கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி, சாமளாபுரம், பூமலூர், 63 வேலம்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள குவாரிகள், ஜல்லி உற்பத்தி நிலையங்கள், தார் கலவை தொழிற்சாலைகள் ஆகியவற்றின் முறைகேடுகள், சட்டமீறல்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், மனுதாரர், மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரையும் உள்ளடக்கி ஆய்வுக் குழு அமைத்து முறைகேடுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அவிநாசி அருகே பைக்கில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர் விபத்தில் பலியானார்.
- நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், வேகக்கட்டுப்பாடு அவசியமானது.
திருப்பூர் :
அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், மது குடித்துவிட்டு ஓட்டுதல், இருசக்கர வாகனங்களில் செல்வோர் ெஹல்மெட் அணியாமல் செல்லுதல், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல்கள் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
சமீபத்தில் அவிநாசி அருகே பைக்கில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர் விபத்தில் பலியானார். அவர் ெஹல்மெட் அணிந்திருக்கவில்லை. பைக்கில் சக நண்பர்கள் 2பேர் உடன் வந்தனர். ெஹல்மெட் அணிந்திருந்தால்விதிமுறையைப் பின்பற்றியிருந்தாலும் குறைந்தபட்ச காயங்களுடன் மாணவர் தப்பியிருக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல், திருப்பூரில் நடைபெறும், பல விபத்துகளுக்கு விதிமீறல்களே காரணமாக அமைகின்றன.இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ெஹல்மெட் அணிவதை சுமையாக கருதத் தேவையில்லை. அது உயிர்க்கவசம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது சுலபமான விஷயம்தான். ஆனால் பலர் இதைப் பொருட்படுத்துவதில்லை.
நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், வேகக்கட்டுப்பாடு அவசியமானது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, திருப்பூரில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிரதான ரோடுகளில் கூட, பலர்வாகனங்களை விதிமுறைப்படி இயக்குவதில்லை.விபத்து நேரும்போதுதவறாக விதிமுறை பின்பற்றுபவர் மட்டும் பாதிக்கப்படவில்லை. விதிமுறையை முறையாக கடைபிடித்து செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். அப்பாவிகள் உயிரிழக்க நேர்கிறது.
திருப்பூரின் ரோடுகள் பரந்து விரிந்தவை அல்ல.பரபரப்புடன் இயங்கும் மாநகரில் வாகனங்களை நிதானமாக இயக்கியாக வேண்டிய கட்டாயம் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் உள்ளது. ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்களில் பறப்பவர்கள் பலர். தற்போது பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் 18 வயது நிரம்பாத மாணவர்கள் பலர் பைக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.போலீசார் அறிவுறுத்தினாலும்ப ள்ளிகளுக்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இது தொடர்கதையாக உ ள்ளது. பெற்றோர் நினைத்தால், வாகனங்களை மாணவர்கள் எடுத்துச்செல்லாமல் தடுக்க முடியும்.கவனமின்மையால் விபத்துகள் கண நேரத்தில் நிகழ்ந்துவிடுகின்றன. ஆனால்ஒவ்வொரு விபத்துகளும், விலை மதிக்க முடியாத இழப்பை ஏதேனும் ஒரு குடும்பத்திற்கோ, விபத்தால் பாதிக்கப்பட்டவரை சார்ந்திருப்பவர்களுக்கோ ஏற்படுத்தி விடுகின்றன.எனவே வாகன விதிமுறைகளை பின்பற்றி விபத்துக்களை தடுக்க வேண்டுமென போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மத்திய அரசின் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன் சிவகாசியில் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை சார்பில் 694 பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுஉள்ளது. இந்த கடையின் உரிமையாளர்கள் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுசெயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுஉள்ளது. இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாக பட்டாசு கடைகளில் சிறப்பு சோதனை நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது 110 பட்டாசு கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் 18 பட்டாசு கடைகள் விதிகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. பட்டாசு கிப்ட் பாக்சுகளில் கேப் வெடி மற்றும் கலர் மத்தாப்பூ பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் இது போன்ற வெடிகளை கிப்ட் பாக்சுகளில் வைக்க வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை தடை விதித்துள்ளது.
இதை தொடர்ந்து அந்த பட்டாசு கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமத்தை ரத்து செய்துள்ளோம். அதே போல் தயாரிப்பு முகவரி இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என விதி உள்ளது.
ஆனால் சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தயாரித்தவர்களின் முகவரி இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த கடைகளின் உரிமங்களையும் ரத்து செய்துள்ளோம். மொத்தத்தில் இந்த ஆய்வில் விதிகளை மீறியதாக 18 பட்டாசு கடைகளின் உரிமங்களை ரத்து செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்